கொழும்பில் 18 மணி நேர நீர் வெட்டு! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 6 January 2023

கொழும்பில் 18 மணி நேர நீர் வெட்டு!


நாளை மற்றும் நாளை மறுதினம் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


எதிர்வரும் சனிக்கிழமை  இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை 4.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு 01, 02, 03, 04, 07, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாளிகாகந்த நீர்த்தேக்கத்துக்கு நீர் விநியோகிக்கும் குழாய் அமைப்பில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad