ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின், குறித்த வரவு செலவுத் திட்டத்தை சபையில் அங்கீகரிக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 03 உறுப்பினர்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 08, தேசிய காங்கிரஸ் 06 உறுப்பினர்களும், பொதுஜன பெரமுன 01 வரவு செலவு திட்டத்தை வரவேற்று உரையாற்றியதுடன், நாட்டிலும், பிரதேசத்திலும் நிலவும் பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் கஷ்ட நிலமைக்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு சுமை ஏற்றாத வகையில் 2023 வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பித்தார் தவிசாளர் அமானுல்லா வரவு செலவுத் திட்டத்தின் அறிக்கை முன் வைத்தார்.
மேலும் தவிசாளர் அமானுல்லா சமர்ப்பித்த 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சபையின் மொத்த வருமானம் 158952000 ரூபாவாகவும், மொத்த செலவீனம் 158949500 ரூபாவாகவும் மிகை 250 ரூபாவாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதனை சபை உறுப்பினர்கள் ஏகமனதாகவும் அங்கீகரித்து, வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது. பிரதேச சபை உறுப்பினர் ஜெமிலா ஹமிட் இவ் வரவு செலவுத் திட்டத்தின்போது பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி திட்டம், போசாக்கு குறைந்த சிறுவர்களுக்கான போசாக்கு உணவு திட்டம், வலது குறைந்தோருக்கான தொழில் முயற்சி திட்டம் போன்றவை விஷேட அம்சமாக காணப்பட்டது. வருமானத்தை அதிகரிப்பதற்கு மக்களிடமிருந்து மேலதிக வரி அறவீடுகளை மேற்கொள்ள வேண்டிய சவால் நிலைக்கு மத்தியில் நியாய பூர்வமாக இந்த வரவு செலவு திட்டத்தை தயார்படுத்தியுள்ளோம்.
இளைஞர் மற்றும் மகளிர் அபிவிருத்தி, விசேட தேவையுடையோர் நலன், கல்விச் செயற்பாடுகள், வாழ்வாதார உதவிகள் போன்ற பணிகளை விசேட கவனத்திற் கொண்டும் பாதீட்டு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
மேலும் உரையாற்றுகையில் வெளிவந்த 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண பரிட்சையில் அக்கரைப் பற்று வலயத்தில் அறபா வித்தியாலயம் முதலாம் இடத்தையும் அர்ஹம் பாடசாலை இரண்டாம் இடத்தையும் தைக்கா நகர் வித்தியாலயம் நான்காம் இடத்தையும் பெற்றிருக்கின்றது அல்ஹம்துலில்லாஹ் இப் பாடசாலையில் நாம் எல்லோரும் பாராட்ட வேண்டும் இப்பாடசாலையின் அதிபர் ஆசிரியர் எல்லோருக்கும் கௌரவம் கொடுக்க வேண்டும் நாட்டில் ஏற்பட்ட பிரச்சனை பொருளாதார ரீதியாக நாடு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் எமது பிரதேசம் பலவிதமான அபிவிருத்திகளை செய்து வந்திருக்கின்றது. என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment