யாழ்.போதனா வைத்தியசாலையின் தீவிர இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு புனரமைக்கப்பட்டு நேற்று(09) திறந்து வைக்கப்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
யாழ்.பரிசுத்த யோவான் கல்லூரி, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி பழைய மாணவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பொன்றின் நிதி உதவியின் கீழ் இந்த அலகு புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வைத்தியசாலை சமூகத்தினர் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment