சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 10 November 2022

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

சுற்றுலா வீசா மூலம், தொழில்வாய்ப்புக்காக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர், பதிவுசெய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இந்த ஆண்டின், இதுவரையான காலப்பகுதியில், சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி, அவர்கள் வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கு செல்ல முயற்சித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது


இதேநேரம், சுற்றுலா வீசா மூலம், வீட்டு வேலை மற்றும் திறன்சாரா துறைகளில் தொழிலுக்காக, பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானம் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad