இந்த வருடத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, 1,415 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, 37,819 சந்தேகநபர்கள் கைதானதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அவற்றுள் அதிகளவிலான சுற்றி வளைப்புக்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்துள்ளன. இந்த வருடத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்பின்போது 26, 581 சந்தேகநபர்கள் கைதாகினர். இதன்போது, 10, 222 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அதேநேரம் குறித்த காலப்பகுதியில் 370 கிலோகிராமும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment