கம்பஹாவின் பல பகுதிகளுக்கு நாளை எட்டரை மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களுக்கு நாளை காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, பேலியகொட வத்தளை, ஜா எல, கட்டுநாயக்க – சீதுவ நகர சபை பிரதேசங்கள் மற்றும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபைப் பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
No comments:
Post a Comment