கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் வெலிகந்த, சிங்கபுர வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். காட்டுப்பகுதியில் காணாமல் போயிருந்த அவர் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பற்றாக்குறையால் சுகவீனமுற்றிருந்த தப்பியோடிய கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் வாளி தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment