புத்தளம்-குரணை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலுடன் கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் குரணை- நீர்கொழும்புக்கு இடையிலான புகையிரத சேவை தாமதம் ஏற்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (15) காலை 9.30 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் குரணை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணித்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
No comments:
Post a Comment