மீண்டும் பால் மாவுக்கு தட்டுப்பாடு! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 15 November 2022

மீண்டும் பால் மாவுக்கு தட்டுப்பாடு!


நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக  பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளரின் செயற்பாடுகளே இதற்கு காரணமாகும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

உரிய நேரத்தில் ஆவணங்களை கையளிக்காமை, கடன்சான்று பத்திரங்களை தாமதப்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக, பால் மா அடங்கிய 15 கொள்கலன்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் பயனாளர்களுக்கு தேவையான பால்மாவினை ஒரே தடவையில் இறக்குமதி செய்து வழங்குவதில் சிக்கல் நிலை உள்ளதாகவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad