பொலிஸாருக்கு எதிராக 9000க்கும் அதிகமான முறைப்பாடுகள்! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 10 November 2022

பொலிஸாருக்கு எதிராக 9000க்கும் அதிகமான முறைப்பாடுகள்!


கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை பொலிஸாருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில், ஒன்பதாயிரத்து இருநூற்று தொண்ணூற்று ஐந்து (9295) முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முறைப்பாடுகளில் சட்டவிரோத கைது, பொய் வழக்குகள், தாக்குதல், சித்திரவதை, பாரபட்சம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பொலிஸாரின் செயலற்ற தன்மை ஆகியவை அடங்குகின்றன. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, இந்த முறைப்பாடுகள், தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதேவேளை, 2015 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2018 ஆம் ஆண்டில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கான பாதீடு ஒதுக்கீடு அதிகரித்துள்ளது. எனினும் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகள் குறித்த தீர்வுகளை தேசிய பொலிஸ் ஆணைக்குழு மேற்கொள்ளவில்லை. 2015ஆம் ஆண்டில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு 47,030,000 ரூபா ஒதுக்கப்பட்டது. எனினும் 2018 இல் 127,764,000 ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 

No comments:

Post a Comment

Post Top Ad