உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக அறிவிக்கத் தவறினால், தேசிய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சில நாட்களில் நீதிமன்றத்தின் தலையீட்டை நாடவுள்ளதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படவுள்ளது.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment