திலினியின் காதலன் வீட்டில் எட்டு தங்கக் கட்டிகள்! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 27 October 2022

திலினியின் காதலன் வீட்டில் எட்டு தங்கக் கட்டிகள்!

பண மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் காதலன் என கூறப்படும் இசுரு தம்மிக்க பண்டாரவின் வீட்டிலிருந்து தலா ஒரு கிலோ எடையுள்ள 8 தங்க கட்டிகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று கண்டெடுத்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு இசுரு பண்டார வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கண்டி பிரிமத்தலா பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன . பிரியமாலி தனக்கு 10 தங்க கட்டிகளை கொடுத்ததாகவும்,


அந்த தங்க கட்டிகளை தனது தந்தையிடம் தான் கொடுத்து வைத்திருந்ததாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் இசுரு தம்மிக்க தெரிவித்திருந்தார். பின்னர், 10 தங்கக் கட்டிகளில் இரண்டை பணத்திற்காக விற்க முயன்றதாகவும், அவை தங்கம் அல்ல, பித்தளை என்றும் அவர் கூறியியுள்ளார்.


கண்டுபிடிக்கப்பட்ட தங்கக் கட்டிகள் உண்மையான தங்கமா மற்றும் அவற்றின் எடை என்ன என்பதைக் கண்டறிய ரத்தினங்கள் மற்றும் நகை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், இசுரு விற்பனை செய்ததாகக் கூறப்படும் ஏனைய 2 கிலோ தங்கக் கட்டிகளை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

Post Top Ad