பல அமைச்சகங்களின் விடயதானங்கள் மாற்றப்பட்டு வர்த்தமானி வெளியீடு. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 27 October 2022

பல அமைச்சகங்களின் விடயதானங்கள் மாற்றப்பட்டு வர்த்தமானி வெளியீடு.

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சில் இருந்து நீக்கப்பட்டு தொழில்நுட்ப அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.


இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களை பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பில் இருந்து நீக்கி, தொழில்நுட்ப அமைச்சின் கீழ் கொண்டுவரும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.


ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு அமைச்சராகவும் தொழில்நுட்ப அமைச்சாகவும் உள்ளார். இந்தநிலையில், தொழில்நுட்ப அமைச்சு, ஒழுங்குமுறை செயல்முறையை வடிவமைத்தல், பொது நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் அதிகரித்து வரும் போட்டிச் சந்தையில் சவால்களுக்குப் பதிலளிப்பதன் மூலம் தொலைத்தொடர்பு துறையில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் அவர் வெளியிட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad