நிறுவனங்களை பதிவு செய்வதற்கான கட்டணங்களில் திருத்தம்! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 27 October 2022

நிறுவனங்களை பதிவு செய்வதற்கான கட்டணங்களில் திருத்தம்!

நிறுவனங்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 25 நிறுவனங்கள் மற்றும் சங்கங்களுக்கு அமைவாக கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனங்களை பதிவு செய்வதற்கு திருத்தப்பட்ட கட்டணமாக 4 ஆயிரத்து 600 ரூபா அறவிடப்படுகின்றது, அத்துடன் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களை பதிவு செய்வதற்கான திருத்தப்பட்ட கட்டணமாக 23 ஆயிரம் ரூபா அறவிடப்படுவதுடன்,


நிறுவனத்தின் பெயரை அங்கீகரிப்பதற்கு 2 ஆயிரத்து 300 ரூபா அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்தப்பட்ட கட்டணங்களுக்கு பெறுமதி சேர் வரி சேர்க்கப்படும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad