இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தில் அமர்வதை தாம் எதிர்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் இலங்கை மக்கள் சார்பாக தீர்மானங்களை எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டைப் பற்றி அக்கறையுள்ள, சிந்திக்கும் இலங்கையர்களே இலங்கையை ஆள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இல்லையெனில், எந்தவொரு இரட்டைக் குடிமகனுக்கும் எதிர்காலத்தில் வேறு நாட்டிற்குச் சென்று அவர்களின் செயல்களின் பின்விளைவுகளை எதிர்கொள்ளாமல் அவர்கள் விரும்பிய வழியில் செயற்பட உரிமை உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment