ஒஸ்ரியாவில் இருந்து சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள். - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 31 October 2022

ஒஸ்ரியாவில் இருந்து சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள்.

எதிர்வரும் பதினைந்து நாட்களில் மக்களுக்கு நிரந்தர சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கார்ட் தட்டுப்பாடு காரணமாக சுமார் 06 லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.

எனினும், அதற்கான அட்டைகளை ஒஸ்ரியாவில் இருந்து இறக்குமதி செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உரிய அட்டைகள் இலங்கையில் பெற்றுக்கொள்ளப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad