2022ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பெயர்களை உள்ளிடுவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வாக்காளர் பட்டியலை உறுதிப்படுத்தும் பணி இன்று (31) இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார். அதன்படி, இதுவரை பெயர் சேர்க்க முடியாதவர்கள், அடுத்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கலாம்.
எவ்வாறாயினும், முதன்முறையாக வாக்களிக்க விரும்பும் நபர்களுக்கு மாத்திரம் நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என நிமல் ஜி.புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment