எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு அல்லது நாளைய தினம் எரிபொருளுக்கான விலையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
ஒவ்வொரு மாதத்திலும் முதலாம் திகதி எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் மாற்றம் கொண்டுவரப்படுகின்றது. இந்த நிலையில் இன்று நள்ளிரவு அல்லது நாளைய தினம் எரிபொருள் விலை குறைவடையும் என்ற எதிர்பார்ப்பில், எரிபொருளுக்கான முன்பதிவுகள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க இறுதியாக 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையானது 40 ரூபாவால் குறைக்கப்பட்டு தற்போது 370 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் ஒரு லீற்றர் 15 ரூபாவால் குறைக்கப்பட்டு தற்போது 415 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
No comments:
Post a Comment