மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபை, வம்மியடியூற்று பாலர் பாடசாலையில் புனர்நிர்மான கட்டிட திறப்பு விழாவும், புதிய கல்வித் தொடக்க விழாவும் கடந்த செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.
போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட 40ஆம் கிராமம் , வம்மியடியூற்று பாலர் பாடசாலையில் கல்வி பயின்று, தரம் 01 இற்கு கால்பதிக்கும் சிறுவர்களை வாழ்த்தி வழிஅனுப்பவும், கல்வியைத் தொடங்குவதற்காகப் புதிய மாணவர்களாக இணையும் மழலைச் செல்வங்களை அன்போடு வரவேற்கும் நிகழ்வானது பாலர் பாடசாலை ஆசிரியரின் தலமையில் இடம் பெற்றன.
சிறப்பு விருந்தினர்களாக
போரதீவுப்பற்று பிரதேசசபையின் உபதவிசாளர் த.கயசீலன் மற்றும் ,திருமதி.கோ.இளங்கீரன் (சனசமுகஅபிவிருத்தி உத்தியோகஸ்தர்,) சு.நிதிவதனன்(அபிவிருத்தி உத்தியோகஸ்தர்) தொழிநுட்ப உத்தியோகஸ்தர்,செ.தேவகுமார்(வம்மியடியூற்று வானிவித்தியாலய அதிபர்) கிராம உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
வம்மியடியூற்று பாடசாலை வளாகத்தில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கட்டட திறப்பு விழாவின் போது புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை திறந்து வைக்கும் நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வின் போரதீவுப்பற்று பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள், குருக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஆலய நிருவாகத்தினர், விளையாட்டுகழகங்கள் கலந்து கொண்டனர்.
வம்மியடியூற்று கிராமத்தின் வருங்காலத் தூண்கள் ஒன்று கூடியிருக்கும் அழகான நாள். முதலாவதாக, இன்று இந்தப் பாலர் பாடசாலையில் முதன்முதலில் அடியெடுத்து வைக்கும் மழலைகளை இருகரம் கூப்பி வரவேற்கின்றோம். உங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான கற்றல் பயணத்திற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்.
அடுத்ததாக, எமது பாடசாலையில் படித்து முடித்துவிட்டு, தரம் 01 எனும் பெரிய பாடசாலை உலகிற்குச் செல்லவிருக்கும் மாணவர்களுக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மற்றும் இப் பாடசாலைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தவிசாளருடன் பேசி அனைத்து குறைபாடுகளையும் எல்லைக் கிராமங்களி செய்து வருகின்றோம் இந்த கிராமத்துக்கும் செய்வதாக உபதவிசாளர் த.கயசீலன் தெரிவித்தார்.
புதிய பாடசாலைக்குச் சென்றாலும், எமது வம்மியடியூற்று பாலர் பாடசாலையின் நற்பெயரைக் காக்கும் வகையில் சிறந்த மாணவர்களாகத் திகழ வேண்டும்.
இந்த நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த போரதீவுப்பற்று பிரதேச சபைக்கும், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் எமது நன்றிகளை உப தவிசாளர் தெரிவித்தார்.
நடனம் ஆடிய மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
(ரஞ்சன்)







No comments:
Post a Comment