மாலைதீவு சுற்றுலாத்துறை அமைச்சர் - மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிர் சந்திப்பு.! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 30 January 2026

மாலைதீவு சுற்றுலாத்துறை அமைச்சர் - மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிர் சந்திப்பு.!

மாலைதீவு குடியரசின் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் தாரிக் இப்ராஹிம் அவர்களை, மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எம். ரிஸ்வி ஹஸன் அவர்கள் அண்மையில் நட்பு ரீதியாக சந்தித்தார்.


இதன்போது, காலநிலை மாற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து பயனுள்ள கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. 

பொதுவான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ளவும், நிலைத்த சுற்றுலா வளர்ச்சியை முன்னெடுக்கவும் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. 


மேலும், இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கிடையிலான நெருக்கமான மற்றும் நட்புறவான இருதரப்பு உறவுகள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டன.

இச்சந்திப்பில் இலங்கை உயர்ஸ்தானிகர் ஆணையத்தின் ஆலோசகர் திமுது திசாநாயக்கே அவர்களும், மாலைதீவு சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் கலாநிதி அப்துல்லா நியாஸ் அவர்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad