சமூக நலன்புரி (SWO) அமைப்பினால், அவுஸ்திரேலியா சிட்னி முருகன் சைவ மன்றத்தின் நிதி உதவியுடன், இரண்டாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சுயதொழிலை மேற்கொள்கின்ற பயனாளர்களுக்கான உதவிகள் கடந்த வெள்ளிக்கிழமை (19) மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இந்த வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்யானந்தி நமசிவாயம் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் அவர்கள், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுகநலன்புரி அமைப்பின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
கோழி வளர்ப்பு, தையல் இயந்திரம், மிளகாய் அரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட சுயதொழில் உதவிகள் மொத்தமாக ஐந்து பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
(ரஞ்சன்)



No comments:
Post a Comment