"லண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர்" ஆலையத்தின் நிதிப் பங்களிப்பில் பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை (17) இடம் பெற்றது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அகிலன் பவுண்டேசன் ஏற்பாட்டில் , காலி எல தமிழ் மகா வித்தியாலயம், அல்-இர்ஷாத் தேசிய பாடசாலை, நியுபக் தமிழ் மகா வித்தியாலயம், கீனகல தமிழ் வித்தியாலம் என நான்கு பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு அகிலன் பவுண்டேசன் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி வி.ஆர்.மகேந்திரன் J.P,MAF,ISD மற்றும் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
(ரஞ்சன்)












No comments:
Post a Comment