மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள 35ஆம் கிராமம் கண்ணபுரத்தில் நேற்று (21) தொல்பொருள் திணைக்களம் நட ஆயத்தமான பெயர் பலகையினை அகற்றிய போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் வி.மதிமேனன், உப தவிசாளர் த.கயசீலன், உறுப்பினர்கள், கிராம பொதுமக்களின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டன.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் வி.மதிமேனன், மன்முணை தென்எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் வினோராஜ், போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் மற்றும் பிரதேசசபையின் வெல்லாவெளி வட்டார உறுப்பினர்கள் கிராமத்து பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தொல்பொருள் திணைக்களத்திகு எதிராக கோஷங்களை எழுப்பி விரட்டியடித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
(ரஞ்சன்)








No comments:
Post a Comment