தேசியகாங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ. எல். எம்.அதாவுல்லா அவர்களின் விசேட பணிப்பின் பேரில், KT13, KT14, கிழக்கு வட்டாரம், நூரணியா வட்டாரம், பதுர் வட்டாரம் உள்ளிட்ட முக்கிய பிரதேசங்களில் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் முக்கியமான பதுர் வட்டாரத்தில் அமைந்துள்ள வடிகால் அமைப்புகள் இன்று (24) அடை மழையிலும் துப்புரவு செய்யப்பட்டன.
இவ்வேளைத்திட்டத்தில், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்கள் நேரடியாக களத்தில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநகர சபையின் முறையான இயந்திரங்கள் பயன்படுத்தி, வெள்ளநீர் சரியாக வடிந்து ஓடும் வகையில் விரைவான சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த வேலைத்திட்டத்தில், பதுர் வட்டார மாநகர சபை உறுப்பினர் ஏ. கே. பாஹிம் மாநகர சபை உறுப்பினர்கள் ஏ.எல். தவம், நுஹ்மான், எம்.என். றியால்,பாஸித், என் ரி அஸ்மத் மற்றும் மாநகர சபை ஊழியர்கள் பங்கேற்றனர்.
பொதுமக்கள் பாதுகாப்பே முதன்மை என்ற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்பாடுகள், தற்பொழுது பெய்து வரும் அடை மழை வெள்ள அபாயத்தை தடுக்கும் முக்கிய முயற்சியாகும்.



No comments:
Post a Comment