எதிர்வரும் (06) திகதி இடம் பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அம்பாறை மாநகர சபை மேயர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள, தேசிய மக்கள் சக்தியின் இந்திக விஜேய விக்ரம தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மேற் கொண்டு வருகின்றார்.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் இன்று (03) அம்பாறை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் இந்திக விஜேய விக்ரம மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் மற்றும் சங்கத்தின் உயர் பீட உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
(எஸ்.அஷ்ரப்கான்)
No comments:
Post a Comment