தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Monday, 5 May 2025

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா !

229342

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா, நேற்று சனிக்கிழமை (03) பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் ஆரம்பமானது.


ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் பதில் உபவேந்தர் யூ.எல்.மஜீத் தலைமையில் சனி, மற்றும் ஞாயிறு இரு தினங்களாக நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் ஆறு அமர்வுகளில் 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர்.

சனிக்கிழமை முதலாம் நாள் முதல் அமர்வில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி யசந்த கொடகொட பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இரண்டாம் அமர்வில் களனி பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை பேராசிரியர் கலாநிதி சீதா.பி. பண்டாரவும், மூன்றாவது அமர்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய நாட்டின் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானியும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
229344



முதல் நாளில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் 172 மாணவர்களும், பொறியியல் பீடத்திலிருந்து  82 மாணவர்களும், தொழினுட்பவியல் பீடத்திலிருந்து 102 மாணவர்களும், கலை கலாசார பீடத்திலிருந்து 314 மாணவர்களும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்திலிருந்து 342 மாணவர்களும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
229336


இன்று இரண்டாம் நாள் முதல் அமர்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே.எல்.வசந்த குமாரவும் இரண்டாம் அமர்வில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ துறையின் பேராசிரியர் கலாநிதி மனோஜ் சமரதுங்கவும் மூன்றாவது அமர்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் ரீ. வேல்நம்பியும் கலந்துகொண்டனர்.
229339


இதன்போது முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்திலிருந்து 378 மாணவர்களும் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்கள் 687 மாணவர்களுமாக 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர் என பதில் பதிவாளர் எம்.ஐ. நெளபர் தெரிவித்தார்.

                                                                                                                                                   (எஸ்.அஷ்ரப்கான்) 

No comments:

Post a Comment

Post Top Ad