மட்டக்களப்பு வெல்லாவெளி - அம்பிளாந்துறை வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மோட்டார் சைக்கிளுடன் மீட்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Wednesday, 28 May 2025

மட்டக்களப்பு வெல்லாவெளி - அம்பிளாந்துறை வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மோட்டார் சைக்கிளுடன் மீட்பு !

0286aa62-d405-4307-9cd7-171e1b647a6f

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் ஆத்தியடி  சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகாமையில் 38 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (28)  காலை மீட்டதுடன் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.


அம்பிளாந்துறையைச் சேர்ந்த உணவகம் ஒன்றின் உரிமையாளரான 38 வயதுடைய தியாகராசா சுகிதரன் (கண்ணன்) என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

c00f4eef-6daf-4d6c-8629-6bade3aafd23

குறித்த நபர் நேற்று (27) செவ்வாய்க்கிழமை இரவு அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி அன்னமலை பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் சம்பவதினமான இன்று காலை பழுகாமம் ஆத்தியடி சந்திக்கு அருகாமையிலுள்ள வீதியிலுள்ள மதகு ஒன்றிற்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன் கீழ் வீழ்ந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு வீதியால் பயணித்தவர்கள் பொலிசாருக்கு அறிவித்தனர்.


இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


                                                                           ( ரஞ்சன் )

No comments:

Post a Comment

Post Top Ad