அநுராதபுரத்தில் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 12 March 2025

அநுராதபுரத்தில் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது !

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவரை கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநர் கல்னேவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை தேட 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.


இந்த சம்பவத்துக்குப் பிறகு, வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அதேசமயம், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (12) நாடளாவிய வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.


இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad