2025 ஆண்டுக்கான வருடாந்த இப்தார் நிகழ்வு சம்மாந்துறை அல் உஸ்வா இஸ்லாமிக் அமைப்பின் தலைவரும் அல் உஸ்வா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபருமான மௌலவி ஐ.எல்.எம். முஸ்தபா தலைமையில் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதியில் இன்று (23) நடைபெற்றது.
சமூக நல்லிணக்கம் இப்தாராக இடம்பெற்ற இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி சிங்களத்தில் அல்ஹாஜ் மௌலவி முஜாஹித் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.
ஜனாஸா சேவைகள் மற்றும் அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை, உயிர் காத்தல் பயிற்சியில் ஈடுபடுகின்றன பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ டி.எல். அப்துல் மனாப், சட்ட உதவி ஆணைக்குழுவின் வடகிழக்கு மாகாண பணிப்பாளரும் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிபதி எம்.டி. சபீர் அஹமட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபர், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றசாட், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி விஹாரி ராஜகுரு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.எம். சஜாத், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம்.எம். நஸீர், சம்மாந்துறை பிரதேச செயலக தீடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச். அல் ஜவாஹிர், மன்னார் மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா, சம்மாந்துறை பொலிஸ் நிலைய உபதேச குழுவின் தவிசாளர் ஏ.ஜே. காமில் இம்டாட் , சட்டத்தரணிகள், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், அம்பாறை வைத்தியசாலை உயர் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், சமயத் தலைவர்கள், ஜனாஸா நலன்புரி அமைப்புக்களான சாய்ந்தமருது , நிந்தவூர், மாளிகைகாடு, சம்மாந்துறை, மருதமுனை அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
( தில்சாத் பர்வீஸ் )
No comments:
Post a Comment