மரணங்களை விடுவித்தலும், மரணம் சம்மந்தமான சட்ட திட்டங்கள் தொடர்பான ஒருநாள் செயலமர்வு சம்மாந்துறையில் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 23 March 2025

மரணங்களை விடுவித்தலும், மரணம் சம்மந்தமான சட்ட திட்டங்கள் தொடர்பான ஒருநாள் செயலமர்வு சம்மாந்துறையில் !

1000098662

மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் தொடர்பான பயிற்சி நெறியின் ஏழாவது நாளாக இன்று (23) சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


சம்மாந்துறையில் மரணங்களை விடுவித்தலும், மரணம் சம்மந்தமான சட்ட திட்டங்கள் தொடர்பான ஒருநாள் செயலமர்வு அல் உஸ்வா இஸ்லாமிக் அமைப்பின் தலைவரும் அல் உஸ்வா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபருமான மௌலவி ஐ.எல்.எம். முஸ்தபா  தலைமையில் இடம்பெற்றது.

1000098659

அம்பாறை மாவட்டம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் அல் உஸ்வா இஸ்லாமிக் நலன்புரி அமைப்பும் இணைந்து 200 மணித்தியாலம் கொண்ட பயிற்சி நெறியை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மேலும், இதன் நோக்கம் அனர்த்தத்தினால் பாதிக்கப்படுகிறது மக்களின் உயிர்களை பாதுகாத்தல், மரணித்த ஜனாஸாக்களை முறையாக விடுவித்தல் மற்றும் அனர்த்தங்களுக்கு தயார் படுத்தல் மற்றும் பதில் நடவடிக்கை திட்டங்களை முன்னேடுப்பதாகும்.

1000098663

வெளிநாட்டுகளில் மரணிக்கும் மரணங்களை விடுவித்தல் மற்றும் நல்லடக்கம் செய்தல் தொடர்பாக தெளிவூட்டுவதற்காக வளவாளராக அல்ஹாஜ் மௌலவி ஐ.எல்.எம். முஸ்தபா (JP), தீடீர் மரணங்கள் தொடர்பாகவும் அம்மரணங்களை விடுவித்தல் தொடர்பாகவும் அரச சட்ட திட்டங்கள் பற்றிய தெளிவூட்டுவதற்காக வளவாளராக சம்மாந்துறை பிரதேச செயலக தீடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச். அல் ஜவாஹிர், பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கையிடல், சடலங்களை விடுவித்தல் தொடர்பான தெளிவூட்டுவதற்காக வளவாளராக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை (JMO) டாக்டர் எம்.எம்.எம். சஜாத், மரணங்கள் தொடர்பான நீதிமன்ற சட்ட திட்டங்கள் தொடர்பான தெளிவூட்டுவதற்காக வளவாளராக ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ டி.எல். அப்துல் மனாப், நீதிமன்ற சட்ட திட்டங்கள் தொடர்பான தெளிவூட்டுவதற்காக வளவாளராக சட்ட உதவி ஆணைக்குழுவின் வடகிழக்கு மாகாண பணிப்பாளரும் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிபதி எம்.டி. சபீர் அஹமட் போன்றவர்களினால் தெளிவூட்டல் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

1000098657

இந்நிகழ்விற்கு, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.சி.எம். அல்தாப், ஜனாஸா நலன்புரி அமைப்புக்களான சாய்ந்தமருது , நிந்தவூர், மாளிகைகாடு, சம்மாந்துறை, மருதமுனை அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், மரண விசாரணை அதிகாரி, சட்ட வைத்திய அதிகாரி, ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி என பலரும் கலந்து கொண்டனர்.

1000098661

1000098658


                                             ( தில்சாத் பர்வீஸ் )




No comments:

Post a Comment

Post Top Ad