மாவடிப்பள்ளியில் தொடர்ச்சியாக நடந்தேறும் களவு சம்பவம்; கள்வர்களை தேடும் பணி தீவிரம்..! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Friday, 28 February 2025

மாவடிப்பள்ளியில் தொடர்ச்சியாக நடந்தேறும் களவு சம்பவம்; கள்வர்களை தேடும் பணி தீவிரம்..!

c6d3e8a4-5ed3-446d-aa2b-87138f4790d1


காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் 4 1/2 பவுன் தங்க நகை, பத்தாயிரம் ரூபாய் பணம் காணாமல் போய் உள்ளதாக இன்று  (28)  போலீசாருக்கு முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளது.


இந் நிலையில், குறித்த காணாமல் போன நகைகள் அடங்கிய வீடானது காரைதீவு போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பிரதேச வீடு என்பதும் பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது. மற்றும் இத் திருட்டுச் சம்பவமானது நேற்றைய தினம் (27)  இரவு இடம் பெற்றுள்ளது.


குறித்த வீட்டின் உரிமையாளர்கள் நேற்றைய தினம் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்று சுமார் இரவு 10 மணி அளவில் மீண்டும் வீட்டை வந்தடைந்தவர்கள் களைக்பல் ஆழ்ந்து உறங்கியுள்ளனர்.   அதிகாலை எழுந்த குடிம்பத்தினர் ஒருவரின் கையடக்க தொலைபேசி ஒன்றினை காணவில்லை என்று அதனைத் தேடிய பொழுதே நகைகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரியும் மற்றும் குறித்த அறையின் கதவும் திறந்த நிலையில் காணப்பட்டதாகவும், வீட்டின் மேல் மாடியில் இருக்கும் சிரிய கதவு கழட்டபட்டுள்ளதையும் அவதானித்துள்ளனர், இவ்வழியாகத்தான் கள்வர்கள் உள்நுழைந்து திருடிச்சென்றிருகலாம் என சந்தேகித்தனர்..


இதன் பின்னரே குறித்த நகைகளை பரிசோதித்த போது 4 1/2 பவுன் தங்க நகைகள் , பத்தாயிரம் ரூபாய் பணம் காணாமல் போய் உள்ளதை கண்டட  குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தத நிலையில் உடனடியாக போலீசாருக்கு குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக அறிவித்துள்ளனர்.


இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் பிரிவினரும் குறித்த திருடு போன நகைகளை மீட்டெடுக்கும் விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்ற அதே வேலை; “ இது போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதால் மக்களை இரவு நேரங்களில் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டு கொண்டனர்”.


குறித்த குடும்பத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரோ அல்லது ரகசியமாக நுழைந்த நபர் ஒருவரினாலே திருட்டு சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என போலீசார் தற்போது சந்தேகித்த நிலையில்  குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக காரைதீவு குற்றத்தடுப்பு பிரிவும் போலீஸ் பிரிவும் ஆரம்பகட்ட விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தகாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad