டெங்கு நோயியை கட்டுப்படுத்துவது ஒவ்வொருவரதும் கடமையாகும் - பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 7 February 2025

டெங்கு நோயியை கட்டுப்படுத்துவது ஒவ்வொருவரதும் கடமையாகும் - பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் !

டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளது என்று நாம் ஒவ்வொருவரும் கூறிக்கொண்டுதான் இருக்கிறோம் மாறாக அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு பொது மக்களின் பங்களிப்பு மிகவும் குறைவு என்று ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தெரிவித்தார்.


ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வேகமாக பரவிவரும் டெங்கு நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பான விஷேட கூட்டம் இன்று (7) பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற போதே பிரதேச செயலாளர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், டெங்கு நோயை கட்டுப்படுத்துவோம் என்ற மனநிலை நம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும் மாறாக அது பிரதேச செயலகத்தின் வேலை என்றோ பிரதேச சபையின் வேலை அல்லது சுகாதார தரப்பினரின் வேலை என்று நாம் எண்ணிக்கொண்டு செயற்படுவதினால்தான் டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறோம்.


பிரதேசத்தில் இருந்து டெங்கை இல்லாமல் செய்வதற்கு நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றியடையலாம் என்றும் தெரிவித்தார்.

பிரதேசத்தில் இருந்து டெங்கு நோயை இல்லாமல் செய்யும் நோக்கில் நாளை சனிக்கிழமை தொடக்கம் பாரிய வேலைத்திட்டம் பிரதேசம் தோறும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், டெங்கு பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்படும் இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இக்குட்டத்தில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரீக், பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ்,  மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல். நௌபர், பொது சுகாதார பரிசோதகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவை அதிகாரி, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், விளையாட்டு உத்தியோகத்தர், இளைஞர் கழக உறுப்பினர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க பிரதி நிதிகள், மாதர் சங்க பிரதிநிதிகள், சமுர்த்தி சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

                                     ( எஸ்.எம்.எம்.முர்ஷித் )

No comments:

Post a Comment

Post Top Ad