கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கு பொறுப்பான பிரதம ஆணையாளர் குழு அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கு விஜயம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 18 December 2024

கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கு பொறுப்பான பிரதம ஆணையாளர் குழு அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கு விஜயம் !


கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கு பொறுப்பான பிரதம ஆணையாளர் திருமதி பீ.ஜீ.ஐ. களனி ஹேமாலி  மற்றும் கல்விக்கல்லூரியின் பிரதி பணிப்பாளர் திருமதி. எம். சுமந்தகுமாரி ஆகிய குழுவினர் உத்தியோகபூர்வமான மேற்பார்வையின் பொருட்டு இன்றைய தினம் (18) அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கு விஜயம் செய்து பார்வையிட்டனர்.


இதன் போது ஆசிரியர் பயலுகனர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும், கல்வி சாரா உத்தியோகத்தர்களுக்கும் தேவையான ஆலோசனை வழங்கியதுடன் கல்விக் கல்லூரியின் எதிர்கால விருத்திக்காக தனது முழுமையான பங்களிப்பினையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்வின் கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி உட்பட உப பீடாதிபதிகள், விரிவுரை இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.







                                             (எம்.ஜே.எம்.சஜீத்)

No comments:

Post a Comment

Post Top Ad