ஓட்டமாவடியில் இளைஞர் பயிற்சி நிலையம் திறப்பு விழா ! - தமிழக குரல் - இலங்கை

Post Top Ad

Wednesday, 18 December 2024

ஓட்டமாவடியில் இளைஞர் பயிற்சி நிலையம் திறப்பு விழா !

cf602b02-4c16-4c35-ba24-bc839e2f17de

இளைஞர்களின் தொழில் விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது இளைஞர் பயிற்சி நிலையம் ஓட்டமாவடியில் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.


இளைஞர் சேவைகள் அதிகாரியும் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான ஏ.எம்.ஹனீபா தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சி.தர்ஸன ஹேவபத்திரன கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிருவாக பணிப்பாளர் மனுல சமல் பெரேரா மற்றும் கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்பு செயலாளர் யூ.எச்.எம்.அப்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

73171ebc-19d1-4e18-ae2a-e8ea3defbf2c


அதிதிகளாக கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் எச்.யூ.சுசந்த, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், பிரதேச செயலக பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி நிசாந்தி அருன்மொழி, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், அகீல் அவசர சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.நியாஸ், ஓய்வு பெற்ற கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பொன் செல்வராஜா, இளைஞர சேவைகள் மன்றத்தின் தேசிய சம்மேளன பிரதிநிதி கே.எல்.எம்.ஹிராஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

dcb7e382-235e-4f9b-a653-665898a0dfdd


இந் நிகழ்வில் மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட இளைஞர் சம்மேளனங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் கல்குடா சக்காத் நிதியத்தினால் பயிற்சி நிலையத்திற்கு மடி கணணியும் அன்பளிப்பு செய்யப்பட்டதுடன் ஓட்டமாவடி இளைஞர் சம்மேளனத்தினால் தங்களது எதிர்கால திட்டம் தொடர்பாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்பு செயலாளர் ஆகியோரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

f566f798-24b5-4e86-ad7b-cc70ae12c6cf

இந் நிகழ்வில் அதிதிகளுக்கு அகீல் அவசர சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.நியாஸ் மற்றும் கல்குடா றைஸ்அப்.அமைப்பின் பிரதி நிதிகளால் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பிரதேச பாடசாலைகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

899b6042-532a-43e1-a228-7d9d44e25d66

ae10a006-9b69-4704-b49c-ccc374e1c970

386d7e17-0166-45a0-817a-610924e349ac

34917f89-489a-4c9d-8e38-c96c382b6971

a48321a9-d570-40bb-b525-3441e9fce211

3332526f-03eb-4086-84e9-ef994107a04f

f8d63a46-3e30-488d-8b5b-a1cae41d537e

397f2da3-caa0-41eb-a079-1462d47d41e5

214d8931-1567-44ab-9c53-c50e553827fe

e3faafab-39ed-4c3c-89bb-ae3eb6c490cc

56d464a4-0503-467a-9373-667cba47a731

                                                      ( எஸ்.எம்.எம்.முர்ஷித் )

No comments:

Post a Comment

Post Top Ad