மாவடிப்பள்ளி றோயல் பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த விடுகை விழாவும், விளையாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு நிகழ்வும் றோயல் பாலர் பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஜெல்ஷா றியாஸ் தலைமையில் மாவடிப்பள்ளி கமு/கமு/அல்-அஸ்ரப் மகா வித்தியாலய முற்றவெளி மைதானத்தில் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.
மாவடிப்பள்ளி றோயல் பாலர் பாடசாலை, இறுதி ஆண்டு வருடாந்த கலை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழாவுக்கு பிரதம அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலகத்தின் முன்பள்ளி உத்தியோகத்தர் ஏ.ஜெஸ்மிர், காரைதீவு பிரதேச செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.எப்.ஹம்சதுல் ஹினாயா ஆகியோர் கலந்து கொண்டதுடன்,
வட்சப் சேனல் ஊடாக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
மேலும் கௌரவ அதிதிகளாக மாவடிப்பள்ளி பெரிய பள்ளிவாசலில் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.மனாப் ஓய்வுபெற்ற ஆசிரியர்,மாவடிப்பள்ளி கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலய முதல்வர் ஏ.எல்.ரஜாப்தீன், ஆகியோர் கலந்து கொண்டதுடன்,
இந்நிகழ்வில் விசேட அதிதிகள் வரிசையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.எம்.ஹபீல் மற்றும் றோயல் பாலர் பாடசாலையில் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் உட்பட மாணவர்களின் தாய், தந்தையரும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளைத்தொடர்ந்து மாணவர்களுக்கு நற் சான்றிதழ்கள், பரிசில்கள், மற்றும் நினைவு சின்னங்கள் வருகைதந்த அதிதிகளால் வழங்கி பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
( முஹம்மத் மர்ஷாத் )
No comments:
Post a Comment