மாவடிப்பள்ளி -சாய்ந்தமருது இணைக்கும் வண்டு வீதி முற்றாக சேதம் போக்குவரத்து சிரமம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 27 December 2024

மாவடிப்பள்ளி -சாய்ந்தமருது இணைக்கும் வண்டு வீதி முற்றாக சேதம் போக்குவரத்து சிரமம் !

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட சாய்ந்தமருது - மாவடிப்பள்ளி செல்லும் வண்டு வீதி நீண்ட காலமாக குன்றும்,குழியுமாக உடைந்து காணப்படுவதால் குறித்த வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் , விவசாயிகள் ,வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக் காட்டுகின்றனர் 


அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக  சாய்ந்தமருது - மாவடிப்பள்ளி செல்லும் உள்ளக வீதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்திருந்தது, இதனால் தற்போது இந்த வீதிகள், ஆங்காங்கே உடைந்து காணப்படுகின்றன.



மழை அதிகரிக்கும் போது வீதிக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதனால், குறித்த இந்த வீதியை பயன்படுத்தும் போது வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.


விவசாயிகள்,பொது மக்கள் போக்குவரத்துச் செய்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் இந்த வீதியின் சரியான வடிகான்களை புணரமைப்புச் செய்து தருமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.



சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.


குறித்த வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்தமையினால் அண்மையில் ஆறு மத்ரஸா மாணவர்கள் உட்பட எட்டு பேர் நீரில் மூழ்கி மரணமானதும் குறிப்பிடத்தக்கது.

             





                

                                                        ( முஹம்மத் மர்ஷாத் )

No comments:

Post a Comment

Post Top Ad