நமது நாட்டுக்கும் பாராளுமன்றத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தி கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை நீக்கக் கூடிய வகையில் பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும்; - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 28 November 2024

நமது நாட்டுக்கும் பாராளுமன்றத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தி கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை நீக்கக் கூடிய வகையில் பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும்;

சபாநாயகரிடம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை ! 



மக்களின் ஆணையினைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் நமது நாட்டிற்கும், நமது பாராளுமன்றத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தி கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மாதம் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் தடை விதிக்க முடிந்தது என பாராளுமன்ற செயலாளர் தெரிவித்தார். 


மக்களின் ஆணையினைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு நமது நாட்டிற்கும் பாராளுமன்றத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான புதிய சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தீர்மானத்தை மேற்கொள்ள நமது பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பத்தாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 162 உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசை முகப்படுத்தல் செயலமர்வு இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் சட்டமூலம் கொண்டு வந்து கடத்தலில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவிலிருந்து நீக்க முடியாத நிலைமை ஏற்படுமாயின் ஜனாதிபதியின் விசேட அதிகாரத்தை பயன்படுத்தி கடத்தலில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதியின் விசேட ஜனாதிபதி குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad