வெள்ளம் காரணமாக வாழைச்சேனை ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்ததால் வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திற்குள் வெள்ள நீர் பிரவேசித்ததுடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆழ்கடல் இயந்திரப்படகுகளும் சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக முகாமையாளர் ஜே.ஆர்.விஜிதரன் தெரிவித்தார்.
வாழைச்சேனை ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்ததால் அந்த நீர் துறைமுகத்தில் வியாரம் இடம் பெறும் இடங்களில் பிரவேசித்து வியாபாரிகள் பாதிக்கப்பட்டதுடன் ஆழ்கடல் இயந்திரப்படகுகளும் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்துள்ளதாக மீன்பிடி துறைமுக முகாமையாளர் தெரிவித்தார்.
வாழைச்சேனை மீன்படி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாழைச்சேனை மற்றும் கல்முனை பிரதேசங்களை சேர்ந்த மீனவர்களது ஆழ்கடல் இயந்திரப்படகுகள் முப்பது பகுதியளவில் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்டதில் பகுதியளில் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.இம்தியாஸ் தெரிவித்தார்.
( எஸ்.எம்.எம்.முர்ஷித் )
No comments:
Post a Comment