கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளகத்தின் ஏற்பாட்டில் தேசியத்தில் சாதனை படைத்து தங்கம் வென்று கிழக்கு மாகாணத்துக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்ந்த செம்மண்ணோடை எம்.எச்.எம்.ஷப்ராஸை பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை (12.08.2024) அலுவலகத் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற கெளரவிப்பு நிகழ்வில் தேசிய ரீதியில் சாதனை படைத்து மாவட்டத்திற்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த எம்.எச்.எம்.ஷப்ராஸ் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம், பணப்பரிசு வங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில், உதவிப்பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா, பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், நிருவாக உத்தியோகத்தர் எம்.தாஹிர், சமுர்த்தி முகாமைத்துவப்பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.பஸீர் மற்றும் அலுவல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
எம்.எச்.எம்.ஷப்ராஸ் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 48வது தேசிய விளையாட்டுப்போட்டியின் 60-65 இடைப்பிரிவில் ஆணழகன் போட்டியில் பங்கு பற்றிய முதலிடத்தினைப் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து கிழக்கு மாகாணத்துக்கும் பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்திருந்தார்.
ஏலவே, இவர் மாகாண மட்டத்தில் இடம்பெற்ற போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருந்ததுடன், மொத்தக் கணிப்பீட்டில் மூன்றாமிடம் பெற்று மிஸ்டர் ஸ்டன் (MISTER EASTEN) எனும் பட்டத்தினையும் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் மாவடிச்சேனை ஓரியண்ட் (ORIENT) உடற்பயிற்சி நிலைய பயிற்றுவிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment