ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர்களுடனான கூட்டம். கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்று (13) மாலை இடம்பெற்ற இக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் , அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், முன்னால் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்சி பிரதான செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
( சாதிக் அகமட் )
No comments:
Post a Comment