நாடகப் போட்டியில் நிந்தவூர் மஸ்ஹர் பெண்கள் பாடசாலை தங்கம் வென்றது ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 7 July 2024

நாடகப் போட்டியில் நிந்தவூர் மஸ்ஹர் பெண்கள் பாடசாலை தங்கம் வென்றது !



அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை முஸ்லிம் கலாசார திறந்த சமூக நாடக போட்டியில் முதலாமிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றது.


நேற்று  (06) காத்தான்குடி மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற மாகாண மட்ட முஸ்லிம் கலாசாரப் போட்டியில் நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகள் முதலாம் இடத்தைப் பெற்று மாகாண மட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்.


முஸ்லிம் கலாசார நாடக போட்டியில் முதலாமிடம் பெற்ற இவர்கள் தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ள போட்டியிலும் வெற்றி பெற வேண்டுமென்று நாம் வாழ்த்துகின்றோம். 

வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.

இதே வேளை, முதற் தடவையாக மாகாண மட்ட முஸ்லிம் கலாசார நாடகப் போட்டியில் முதலிடத்தைப் பெறுவதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு பாடசாலையின் அதிபர் ஏ.சி.ஹாமிது தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். 


இம்மாணவிகளுக்கு பயிற்சி வழங்கிய ஜெம்ஸித் ஹஸன், கலாசார குழு ஆசிரியர்களான உதவி அதிபர் எம்.ஏ.ஜெஸீர் அலி (தலைவர்), திருமதி எஸ்.ஆர்.எம்.பாஸில், எம்.ஐ.எம்.அஸ்ஹர், எம்.ஐ.மாஜித், திருமதி கமருன்நிஸா அஹமட், எம்.ரி. அலி சப்ரி, செல்வி எம்.ஆர்.எப்.றஸ்னா நாடகத்திற்கு தேவையான சித்திர வேலைகளை செய்து கொடுத்து உதவிய சித்திரப் பாட ஆசிரியர்களான திருமதி பி.எம்.எஸ்.ஜெஸீலா, திருமதி றஸீன், திருமதி எம்.எஸ்.நஸ்லூன் சித்தரா, இணைப் பாடவிதானத்திற்கு பொறுப்பான உதவி அதிபர் எஸ்.எம்.ஹனிபா, பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் மற்றும்  ஏனைய உதவிகளை வழங்கிய பைஸர்  ஆகியோர்களுக்கும் அதிபர் தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.


அத்தோடு இம்மாணவிகளை வலய மட்டப் போட்டிகளுக்கு தயார்படுத்திய பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.எரி.நௌபல் அலிக்கும் அதிபர் ஏ.சி.ஹாமிது தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad