உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழு இந்திய அதிதிகள் குழுவை சந்தித்தது ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 4 July 2024

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழு இந்திய அதிதிகள் குழுவை சந்தித்தது !



இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற் பாட்டில் அதன் தலைவர் மெளலவி முபாரக் அப்துல் மஜீட் அவர்களின் நெறிப்படுத்தலில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய அதிதிகள் குழுவுடனான உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழு சந்திப்பு நேற்று சாய்ந்தமருதில் இடம்பெற்றது. 

எமது வட்சப் சேனல் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.


இந்தியன் முஸ்லிம்லீக்கின் பிராந்தியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டசபை உறுப்பினருமான கெளரவ கே. ஏ. எம். முஹம்மத் அபூபக்கர் (MLA), தமிழ்நாடு சிரேஸ்ட ஊடகவியலாளர் மணிச்சுடர் மற்றும் மக்கள் குரல் ஜனாப் எம். கே. சாஹுல் ஹமீது,
இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கின் உதவிப் பொதுச் செயலாளர் ஜனாப், எஸ். ஏ. முஹம்மத் மக்கி தமிழ்நாடு திருநெல்வேலி "அலி சன்ஸ்" நிறுவன தலைவர், ஜனாப் எம். நெய்னார் முஹம்மத் கடாபி ஆகியோர் அடங்கிய குழுவை நேற்றைய தினம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுக் குழுவினர் கல்முனையில் சந்தித்தனர். 



இச் சந்திப்பில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பாகவும் பேசியிருந்தனர். பரஸ்பர புரிதலுடநான இச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்மிடையிலான கலை கலாச்சாரம் இலக்கியம் பற்றிப் பேசப்பட்டதுடன் மாநாட்டுக் குழுவினரை இந்தியாவிற்கு வருகை தருமாறும் அதிதி களால் அழைப்பு விடுக்கப்பட்டது.


அதிதிகளின் அழைப்பை ஏற்று விரைவில்
மாநாட்டு குழு இந்தியா  செல்லவிருப்பதாக மாநாட்டுக் குழுத் தலைவர்கலாநிதி ஏ. எல் அன்சார் தெரிவித்தார்.


சாய்ந்தமருது இக்ராகலையகத்தில்
இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்திய அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவம் வழங்கப்பட்டது.அத்தோடு இந்நிகழ்வில் மாநாட்டுத்தலைவர் அன்சார் அவர்களால் சிரேஸ்ட ஊடகவியலாளர் கல்முனை ஜெஸ்மின் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத் தலைவராகத் தெரிவாவதற்கு அரும்பாடுபட்டமயை பாரடியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர இணைச்செயலாளர் ஊடகவியலாளர் சாதிக் ஷிஹான் ஆகிய இருவரையும் பொன்னாடை போர்த்தியும் நினைவுச்சின்னம் வழங்கியும் கெளரவிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.      













                                                       (எஸ்.அஷ்ரப்கான்)


No comments:

Post a Comment

Post Top Ad