நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் பொறியிய லாளருமான கலாநிதி உதுமான்கண்டு நாபீர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கவுள்ள நிலையில் ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயும் கலந்துரையாடல் (01) மகளிர் அமைப்பின் தலைவி ரஹீமா தலைமையில் நடைபெற்றது.
இங்கு கலந்து கொண்டு உரையாற்றிய தலைவி றஹீமா, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், கல்முனை மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களிலுள்ள மகளிர் அமைப்பினர் தங்களது பிரதேசங்களில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாவும் பெருமளவிலான பொதுமக்கள் பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீருடன் இணைந்து பயணிப்பதற்கு முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அம்பாரை மாவட்ட மக்கள் அரசியல் ரீதியாக பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீருக்கு தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற ஆதரவு நாளுக்காக நாள் அதிகரித்து வருகிற நிலையில் நேற்றைய நிகழ்விலும் நாபீர் பவுண்டேஷன் மகளிர் அமைப்பில் புதிய உறுப்பினர்கள் இணைந்து செயற்படுவதற்கு முன்வந்தனர். அத்தோடு தங்களது பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாகவும் குறித்த அங்கத்தவர்கள் தெரிவித்தனர்.
( ஏ.எம்.அஜாத்கான் )
No comments:
Post a Comment