உணவு மற்றும் போசணையை கட்டியெழுப்பும் செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் மாண்புமிகு பிரதமர் தினேஷ் குணர்வத்தன மற்றும் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
குருநாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுய தொழில் முயற்சியாளர்களுக்கான இலத்திரனியல் கோழிக் குஞ்சு பொறிக்கும் இயந்திரங்கள் மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாண்புமிகு பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட், ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் சமன்பிரிய ஹேரத், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, யூகே சுமித் உடுகும்புற, மாகாண பிரதம செயலாளர் தீபிகா கே குணரத்தின, மாவட்ட அரசாங்க அதிபர் ரத்நாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
( சாதிக் அகமட் )
No comments:
Post a Comment