மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியான போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் ஆயிரங்கால் மண்டப வீதியில் உள்ள வாய்க்காலில் இன்று (16) பி.ப 2.00 மணியளவில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக கிராமவாசிகளினால் அடையாளம் காணப்பட்டது .
இச்சம்பவம் தொடர்பாக,
வெல்லாவெளி விவேகானந்த புரம் கிராமத்தை சேர்ந்த 64 வயதுடைய 6பிள்ளைகளின் தந்தையான பிள்ளையான்குட்டி புலேந்திரன் என உறவினர்களினால் அடையாளம் காட்டப்பட்டது.
கடந்த ( 14-06-2024) வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் தனது வீட்டிலிருந்து மாலை வேளையில் ஆயிரம்கால் மண்டப வைரவர் ஆலயத்தில் சென்று மீன்டும் வரும் போது யானை தாக்கி உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த வெல்லாவெளி பொஸிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment