ஐக்கிய தேசியக் கட்சியின் ஏறாவூர் பற்று செயற்பாட்டு அலுவலகம் வலய அமைப்பாளர் எம் ஐ. பாறூக் தலைமையில் ஏறாவூர் அல் அஸ்ரப் வித்யாலயத்தின் அருகாமையில் இன்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
அலுவலகத்தை திறந்து வைத்தபின்னர் வலய அமைப்பாளர் எம்.ஐ.பாறூக் உரையாற்றுகையில், நாட்டை பொருளாதார சரிவிலிருந்து மீட்டெடுத்த தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க . இவர் மூலமே நாட்டை மேலும் சுபிட்சத்தின்பால் கொண்டு செல்ல முடியும். வங்குரோத்து நிலையில் இருந்த அரச நிதி கையிருப்பு இன்று பல மில்லியன் அமெரிக்க டொலர்களால் நிறைந்துள்ளது .
வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது . அரச ஊழியர்களுக்கான சம்பளம் கூடியுள்ளது. பொருட்களின் விலைகளை படிப்படியாக குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களின் நன்மை கருதி அஸ்வசும திட்டத்தின் மூலம் 24 இலட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
மாணவர்களின் கல்வியினை முன்னேற்றுவதற்கும், வேலையில்லா இளைஞர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழில் வாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், நாட்டு மக்களின் நன்மைக்காக சிறந்த பல திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வருகின்றார் என குறிப்பிட்டார்.
அலுவலக திறப்பு நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
( ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட் )
No comments:
Post a Comment