அல் அஷ்ஹர் வித்தியாலயத்திற்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் கிடைக்கப் பெற்ற நிதியிலிருந்து அமைக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.அப்துல் ஜப்பார் தலைமையில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்றது.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
இந் நிகழ்வுக்கு பிரதம அதீதியாக சம்மாந்துறை வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரக் குமார் கலந்து கொண்டு திறந்து வைத்ததுடன் பாடசாலையின் வளாகத்தினை மேற்பார்வை செய்ததுடன், பாடசாலையில் உள்ள குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டார்.
மேலும் பாடசாலையின் வளாகத்தில் பயன்தரக் கூடிய மரம் நடும் திட்டத்தின் அங்குரார்பன நிகழ்வும் இடம்பெற்றது, இதன் முதலாவது மரம் வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரக் குமார் அவர்களின் கரங்களினால் நடப்பட்டது.
நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக வருகை தந்த வலய கல்விப் பணிப்பாளரை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. நிகழ்வில் உரை நிகழ்த்திய வலய கல்விப் பணிப்பாளர் “பாடசாலையில் கட்டிடம் என்பது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அத்தியவசியமான ஒன்று ; ஆகவே இதனூடாக மாணவர்களின் கல்வியில் சிறந்த பேறுகளை எதிர் பார்க்கிறோம்” என்றும் கூறினார்.
இந்நிகழ்வுக்கு பிரதிக் கல்வி பணிப்பாளர் (நிர்வாகம்) பி.எம்.வை.அரபாத் முகைடீன், பிரதிக் கல்வி பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) பி.பரமதயாளன், பிரதிக் கல்வி பணிப்பாளர் (கல்வி முகாமைத்துவம்) ஆ.நைரூஸ் கான், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
( அகமட் கபீர் ஹஷான் அஹமட் )
No comments:
Post a Comment