2024ம் ஆண்டு உலக புகைத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட குறுக்கெழுத்து போட்டியில் ஐம்பதுபரிசில்களில் இருபத்தி மூன்று பரிசில்களை ஓட்டமாவடி கல்வி கோட்டம் பெற்று சாதனை படைத்துள்ளது.
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் அமைச்சினூடாக அனுப்பப்பட்டு இன்று (24) திங்கள் கிழமை வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் ஓட்டமாடி பிரதேச செயலக பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், வாழைச்சேனை இலங்கை மின்சார சபையின் மின் பொறியலாளர் எச்.எம்.எம். றியால், வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி டபள்யூ.ஜி.ஜே.ஹேரத், தாருல் உலூம் வித்தியாலய அதிபர் எம்.எல்.எம்.பைஸல், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி தாருல் உலூம் பாடசாலையில் இருந்து நூற்றி எழுபத்திரெண்டு (172) மாணவர்கள் பங்குபற்றி இருபத்திரெண்டுமாணவர்களும்; ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இருந்து ஒருவர் போட்டியில் கலந்து கொண்டு அவர் வெற்றி பெற்றுள்ளதுடன் மொத்தமாக தேசியத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐம்பது வெற்றியாளர்களில் இருபத்தி மூன்று வெற்றியாளர்களளை ஓட்டமாவடி கல்வி கோட்டம் தனதாக்கி கொண்டுள்ளது.
நாடலாவிய ரீதியில் ஐம்பது பரிசில்களில் இருபத்திமூன்று பரிசில்கள் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கிடைத்தது மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் கிடைத்த வெற்றியாகும் இந்த வெற்றி கிடைப்பதற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன் குறிப்பாக ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய அதிபர் எம்.எல்.எம்.பைஸலுக்கு எங்கள் அலுவலகம் சார்பாகவும் எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
No comments:
Post a Comment