மட்டக்களப்பு பழுகாமம் "லேக் சில்ரன் பார்க்" விசமிகளால் உடைப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 24 June 2024

மட்டக்களப்பு பழுகாமம் "லேக் சில்ரன் பார்க்" விசமிகளால் உடைப்பு !



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று  பிரதேச சபைக்குரிய  திருப்பழுகாமம்  சில்ரன் பார்க்கானது இன்று (24) காலையில்  மீனவர்கள்  பார்க்கும் போது சுற்று வேலிகள் முற்றாக உடைக்கப்பட்டு கானப்படுவதாக தெரிவித்துள்ளனர்.


போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் சி.பகீரதன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டதுடன், "லேக் சில்ரன்" பார்க்  விசமிகளால் அடித்து உடைக்கப்பட்டது சம்பந்தமாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடையும் பதிவு செய்துள்ளார்.



சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று  பிரதேச சபைக்குரிய  திருப்பழுகாமம்  சில்ரன் பார்க் ஆனது  நீண்ட நாளாக பராமரிக்கப்படாமல்  விளையாட்டு உபகரணங்கள்  பழுதடைந்த நிலையிலும்  பற்றைக் காடுகள் நிறைந்த நிலையில்  காணப்பட்டது.


களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற  நீதிபதி J.B.A.ரஞ்சித்குமார்  அவர்களின் வழிகாட்டலில்  கீழ் சமுதாய சீர்திருத்த கட்Lளையாளர்களைக் கொண்டு  பிரதேச சபையின் அனுசரணையுடன் சில்ரன் பார்க்கின்  விளையாட்டு உபகரணங்கள் புனர் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த வருடம் (21-11-2023) ஆம் திகதி "பழுகாமம் லேக் சில்ரன் பார்க்"  என புதிய பெயர் நீதிபதி அவர்களினால் சூட்டப்பட்டு மரநடுகையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad