ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் கோலம் சர்வார்க்கும் (Golam Sarwar) இடையிலான சந்திப்பொன்று இன்று (12-06-2024) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சார்க் நாடுகளுக்கிடையிலான பல்வேறு திட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் பாரபட்சமின்றி தலையீடு செய்யுமாறு சார்க் பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
இலங்கையில் செயற்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கு சார்க் நாடுகளின் ஆதரவை பெறுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை சார்க் கலாச்சார மையத்தை மொடர்ன் ஆர்டிற்காக மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
No comments:
Post a Comment